குறள் 651-660 வினைத்தூய்மை

குறள் 651:.
துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம் 
வேண்டிய எல்லாந் தரும்.

Tamil meaning

ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும். 

English meaning
The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.

குறள் 652:.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு 
நன்றி பயவா வினை.

Tamil meaning
புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் அவற்றை விட்டொழிக்க வேண்டும். 

English meaning
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future). 

குறள் 653:.

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை 
ஆஅதும் என்னு மவர்.

Tamil meaning
மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும். 

English meaning
Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame). 

குறள் 654:.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் 
நடுக்கற்ற காட்சி யவர்.

Tamil meaning
தெளிவான அறிவும் உறுதியும் கொண்டவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடமாட்டார்கள்.

English meaning
Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers). 

குறள் 655:.

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் 
மற்றன்ன செய்யாமை நன்று.

Tamil meaning
என்ன தவறு செய்துவிட்டோம் என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் செய்யாதிருப்பதே நன்று. 

English meaning
Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved not. 

குறள் 656:.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க 
சான்றோர் பழிக்கும் வினை.

Tamil meaning
பசியால் துடிக்கும் தனது தாயின் வேதனையைத் தணிப்பதற்காகக்கூட இழிவான செயலில் ஈடுபடக்கூடாது. 

English meaning
Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt). 

குறள் 657:.

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் 
கழிநல் குரவே தலை.

Tamil meaning
பழிக்கு அஞ்சாமல் இழிவான செயல்களைப் புரிந்து செல்வந்தராக வாழ்வதைவிட, கொடிய வறுமை தாக்கினாலும் கவலைப்படாமல் நேர்மையாளராக வாழ்வதே மேலானதாகும். 

English meaning
Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds. 

குறள் 658:.

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் 
முடிந்தாலும் பீழை தரும்.

Tamil meaning
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும். 

English meaning
The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow. 

குறள் 659:.

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் 
பிற்பயக்கும் நற்பா லவை.

Tamil meaning
பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும். 

English meaning
All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit. 

குறள் 660:.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் 
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.

Tamil meaning

தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.

English meaning
For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water. 

No comments:

Post a Comment