குறள் 691-700 மன்னரைச் சேர்ந்தொழுதல்

குறள் 691:.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க 
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

Tamil meaning
முடிமன்னருடன் பழகுவோர் நெருப்பில் குளிர் காய்வதுபோல அதிகமாக நெருங்கிவிடாமலும், அதிகமாக நீங்கிவிடாமலும் இருப்பார்கள். 

English meaning
Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near. 

குறள் 692:.
மன்னர் விழைப விழையாமை மன்னரால் 
மன்னிய ஆக்கந் தரும்.

Tamil meaning
மன்னர் விரும்புகின்றவைகளைத் தமக்கு வேண்டுமெனத் தாமும் விரும்பாமலிருத்தால் அவர்க்கு அந்த மன்னர் வாயிலாக நிலையான ஆக்கத்தை அளிக்கும். 

English meaning
For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.

குறள் 693:.
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் 
தேற்றுதல் யார்க்கும் அரிது.

Tamil meaning
தமக்கு மேலேயுள்ளவர்களிடத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள விரும்புகிறவர்கள். பொறுத்துக் கொள்ள முடியாத குற்றங்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அப்படி செய்துவிட்டால் அதன் பிறகு தம் மீது ஏற்பட்ட சந்தேகத்தை நீக்குவது எளிதான காரியமல்ல. 

English meaning
Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it. 

குறள் 694:.
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் 
ஆன்ற பெரியா ரகத்து.

Tamil meaning
ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும். 

English meaning
While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others. 

குறள் 695:.
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை 
விட்டக்கால் கேட்க மறை.

Tamil meaning
பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது, அது என்னவென்று வினவிடவும் கூடாது. அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும். 

English meaning
When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself). 

குறள் 696:.
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில 
வேண்டுப வேட்பச் சொலல்.

Tamil meaning
ஒருவரின் மனநிலை எவ்வாறு உள்ளது என்பதை அறிந்து, தக்க காலத்தைத் தேர்ந்தெடுத்து, வெறுப்புக்குரியவைகளை விலக்கி, விரும்பத் தக்கதை மட்டுமே, அவர் விரும்பும் வண்ணம் சொல்ல வேண்டும். 

English meaning
Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable. 

குறள் 697:.
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் 
கேட்பினும் சொல்லா விடல்.

Tamil meaning
விரும்பிக் கேட்டாலும் கூட, பயனுள்ளவற்றை மட்டுமே சொல்லிப் பயனற்றவைகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும். 

English meaning
Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so). 

குறள் 698:.
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற 
ஒளியோடு ஒழுகப் படும்.

Tamil meaning
எமக்கு இளையவர்தான், இன்ன முறையில் உறவுடையவர் தான் என்று ஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள் அடைந்துள்ள பெருமைக்கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். 

English meaning
Ministers should behave in accordance with the (Divine) light in the person.

குறள் 699:.
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் 
துளக்கற்ற காட்சி யவர்.

Tamil meaning
ஆட்சியால் நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள். 

English meaning
Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) "We are esteemed by the king". 

குறள் 700:.
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் 
கெழுதகைமை கேடு தரும்.

Tamil meaning
நெடுங்காலமாக நெருங்கிப் பழகுகிற காரணத்தினாலேயே தகாத செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.

English meaning
The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin. 

No comments:

Post a Comment