குறள் 1091-1100 குறிப்பறிதல்

குறள் 1091:.
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

Tamil meaning
காதலியின் மைதீட்டிய கண்களில் இரண்டு வகையான பார்வைகள் இருக்கின்றன, ஒரு பார்வை காதல் நோயைத் தரும் பார்வை, மற்றொரு பார்வை அந்த நோய்க்கு மருந்தளிக்கும் பார்வை.

English meaning
There are two looks in the dyed eyes of this (fair one); one causes pain, and the other is the cure thereof.

குறள் 1092:.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

Tamil meaning
கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!.

English meaning
A single stolen glance of her eyes is more than half the pleasure (of sexual embrace).

குறள் 1093:.
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

Tamil meaning
கடைக்கண்ணால் அவள் என்னைப் பார்த்த பார்வையில் நாணம் மிகுந்திருந்தது, அந்தச் செயல் அவள் என்மீது கொண்ட அன்புப் பயிருக்கு நீராக இருந்தது.

English meaning
She has looked (at men) and stooped (her head); and that (sign) waters as it were (the corn of) our love.

குறள் 1094:.
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

Tamil meaning
நான் பார்க்கும்போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும், நான் பார்க்காத போது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும் குறிப்பல்லவா?.

English meaning
When I look, she looks down; when I do not, she looks and smiles gently.

குறள் 1095:.
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

Tamil meaning
அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்.

English meaning
She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.

குறள் 1096:.
உறாஅ  தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

Tamil meaning
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்.

English meaning
Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.

குறள் 1097:.
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

Tamil meaning
பகையுணர்வு இல்லாத கடுமொழியும், பகைவரை நோக்குவது போன்ற கடுவிழியும், வெளியில் அயலார் போல நடித்துக்கொண்டு உள்ளத்தால் அன்பு கொண்டிருப்பவரை அடையாளம் காட்டும் குறிப்புகளாகும்.

English meaning
Little words that are harsh and looks that are hateful are (but) the expressions of lovers who wish to act like strangers.

குறள் 1098:.
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

Tamil meaning
நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள்.

English meaning
When I look, the pitying maid looks in return and smiles gently; and that is a comforting sign for me.

குறள் 1099:.
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

Tamil meaning
காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர்.

English meaning
Both the lovers are capable of looking at each other in an ordinary way, as if they were perfect strangers.

குறள் 1100:.
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

Tamil meaning
ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன.

English meaning
The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers)

No comments:

Post a Comment